ஐஐடி மெட்ராஸ்: அதிகளவு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்கள்; அதிகபட்ச ஆண்டு சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? – Vikatan

சென்னைச் செய்திகள்

மேலும் 2018 – 19ம் ஆண்டு கல்வியாண்டில் பதிவு செய்யப்பட்ட 1,151 மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை விட இந்த ஆண்டின் வேலைவாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு 14 நிறுவனங்களில் இருந்து 45 சர்வதேச வேலைவாய்ப்புகள் வந்துள்ளன. மேலும் 131 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 199 வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளனர். கேம்பஸ் இன்டர்வியூவிற்கு பதிவு செய்யப்பட்ட 80 சதவிகித மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது.

வேலைகள் அதிக அளவில் கிடைத்தது ஒருபுறம் என்றால், அனைவருக்கும் நல்ல சம்பளத்தில் வேலையும் கிடைத்துள்ளது. அதாவது மாணவர்களின் சராசரி ஆண்டு சம்பளம் 21.48 லட்சம், அதிகபட்சமாக 1.98 கோடி என்று ஐஐடி மெட்ராஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

`2021 – 22 வேலைவாய்ப்புகளில் எங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது அதிக வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்தது’ என ஐஐடி மெட்ரோஸின் பேராசிரியரான சி. எஸ். ஷங்கர் ராம் கூறியுள்ளார்.

Source: https://www.vikatan.com/news/education/iit-madras-record-highest-number-of-placement-in-campus-placements