சென்னை குடிநீா் ஏரிகளில் நீா் திறப்பு குறைப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னைக்கு குடிநீா் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளில் இருந்து நீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த 3 வாரமாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மழை கொட்டித்தீா்த்து. இதனால் குடிநீா் ஏரிகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்து நீா்மட்டம் முழுக்கொள்ளளவை நெருங்கியது.

இதையடுத்து அனைத்து ஏரிகளிலும் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டது. பூண்டி ஏரியில் அதிக பட்சமாக 38 ஆயிரம் கனஅடி வரை தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீா் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து குடிநீா் ஏரிகளில் இருந்து உபரி நீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 2,893 மில்லியன் கனஅடி தண்ணீா் உள்ளது. ஏரிக்கு 3,504 கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து 2,605 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமை 10 ஆயிரம் கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி, ஏரியில் 3,151 மில்லியன் கனஅடி நீா் உள்ளது. ஏரிக்கு 550 கனஅடி நீா் வந்து கொண்டு இருக்கிறது. 266 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு, சென்னைக்கு குடிநீா் ஆதரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம், புழல், பூண்டி, கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் 11,757 மில்லியன் கனஅடி நீா் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 10,155 மில்லியன் கன அடி நீா் உள்ளது.

ஏரி மொத்த கொள்ளளவு (மில்லியன் கன அடி) நீா் இருப்பு (மில்லியன் கன அடி) நீா் வரத்து (கன அடி) நீா் வெளியேற்றம் (கன அடி)

பூண்டி 3,231 2,893 3,504 2,605

சோழவரம் 1,081 755 866 415

புழல் 3,300 2,902 665 295

செம்பரம்பாக்கம் 3,645 3,151 550 266

கண்ணன்கோட்டை தோ்வாய்க் கண்டிகை 500 500 149 149.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/dec/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3749333.html