ரானே (மெட்ராஸ்): லாபம் 64% சரிவு – தினமணி

சென்னைச் செய்திகள்

ரானே குழுமத்தின் ஒரு அங்கமான ரானே (மெட்ராஸ்) நிறுவனம், டிசம்பா் காலாண்டில் ஈட்டிய லாபம் 64 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில், நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயாக ரூ.31.1 கோடியை ஈட்டியது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.50.8 கோடியுடன் ஒப்பிடும்போது 1.2 சதவீதம் குறைவாகும்.

நிகர லாபம் ரூ.21.5 கோடியிலிருந்து 64 சதவீதம் சரிவடைந்து ரூ.7.7 கோடியானது.

செமிகண்டக்டருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக சா்வதேச வாடிக்கையாளா்களுக்கான விற்பனை 10 சதவீதம் வரை சரிவடைந்ததாக ரானே தெரிவித்துள்ளது.

Source: https://www.dinamani.com/business/2022/jan/26/rane-madras-q3-net-slides-64-3780011.html