சென்னை கடற்கடையில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி… – dinamalarnellai.com

சென்னைச் செய்திகள்

கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவின் இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை. கொரோனா கால ஊரடங்குகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் நீக்கப்படவில்லை. கொரோனா அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது நாம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போன்களை போல். தமிழகத்தில் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டது. 

மேலும் கோவில், தேவாலயங்களுக்கு வார இறுதி நாட்களில் செல்ல தடைவிதிக்கப்பட்டது. கடற்கரைக்கு செல்ல எல்லா நாலும் தடை விதிக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.  இதையடுத்து, இன்று முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், கடற்கரைக்கு தங்களது குடும்பங்களுடன் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனை கண்காணிக்க மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: http://www.dinamalarnellai.com/web/news/110107