பராமரிப்பு பணி: இன்று சென்னை புறநகர் ரயில் சேவைகள் ரத்து விவரம்… – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை: ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் மின்சார பணிகளின் பராமரிப்பு காரணமாக சென்னை புறநகர் ரயில்களின் சில சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை  கடற்கரையில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு தாம்பரம் இயக்கப்படும் மின்சார ரயில் (40413), தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.25 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (40144), தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (40148) ரத்து செய்யப்படுகிறது .

வேளச்சேரியில் இருந்து காலை 9.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (41523), வேளச்சேரியில் இருந்து காலை 9.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (41516), வேளச்சேரியில் இருந்து இரவு 10.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் (41134) ரத்து செய்யப்படுகிறது

வேளச்சேரியில் இருந்து பயணிகள் சிறப்பு ரயில் (41134) இன்று இரவு 10.40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் . சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – திருமால்பூர் இடையே 61 மின்சார ராயில்கள் , செங்கல்பட்டு – திருமால்பூர் – சென்னை கடற்கரை இடையே 62 மின்சார ரயில்கள் என 123 மின்சார ரயில்கள் மட்டுமே நாளை இயக்கப்படும் .

இந்த ரயில்கள் அனைத்தும் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் .

மதுரை நிஜாமுதீன் அதிவிரைவு ரயில் (12651) எழும்பூர் ரயில் நிலையத்தில் நாளை 8 நிமிடம் தாமதமாக புறப்படும் .

ஐதராபாத் – தாம்பரம் சார்மினார் (12760) அதி விரைவு ரயில் இன்று சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் .  சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படாது.

இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது .

Source: https://patrikai.com/maintenance-work-chennai-suburban-train-some-services-canceled-today/