விபத்து நடந்தா என்ன பண்ணுவீங்க? போலீஸ் கேள்வி.. சென்னையில் கைவிடப்பட்ட சொமேட்டோவின் 10 நிமிட டெலிவரி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 10 நிமிட டெலிவரி திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று சொமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா முழுக்க தற்போது உணவு டெலிவரி சேவை அதிகரித்துள்ளது. அதிலும் கொரோனா காலத்திற்கு பின்பாக மக்கள் வெளியே சென்று உணவு சாப்பிடுவதை விட வீட்டில் இருந்து சாப்பிடுவதையே அதிகம் விரும்புகிறார்கள்.

இதனால் உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக உணவு டெலிவரி சேவை நிறுவனங்கள் இடையே யார் உணவை வேகமாக டெலிவரி செய்வது என்ற போட்டியும் நிலவி வருகிறது.

ஸொமேட்டோ 10 நிமிட டெலிவரி சர்ச்சை: விளக்கம் கேட்க காவல்துறை முடிவுஸொமேட்டோ 10 நிமிட டெலிவரி சர்ச்சை: விளக்கம் கேட்க காவல்துறை முடிவு

சொமேட்டோ

இந்த நிலையில்தான் சொமேட்டோ நிறுவனம் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தது. அதன்படி, ஏற்கனவே மக்கள் அதிகம் ஆர்டர் செய்த்தாஹ் உணவுகள், ஒரு பகுதியில் இருக்கும் மக்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகள், விருப்பமான ஹோட்டல்களில் பட்டியலை வைத்து உணவு பல்வேறு சென்டர்களில் தயார் நிலையில் இருக்கும். அதேபோல் டெலிவரி செய்யும் நபர்களும் தயார் நிலையில் இருப்பார்கள்.

10 நிமிட டெலிவரி

உணவு ஆர்டர் செய்யப்பட்டதும் இவர்கள் 10 நிமிடத்தில் அதை டெலிவரி செய்து விடுவார்கள் என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ திபீந்தர் கோயல் தெரிவித்து இருந்தார். ஆனால் இவரின் இந்த திட்டம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்வது என்பதை டெலிவரி செய்யும் நபர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும். போக்குவரத்து பிரச்னையை, விபத்துகளை ஏற்படுத்தும் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

விமர்சனம்

டெலிவரி பணிகளும் மனிதர்கள்தான். அவர்கள் ரோபோட் கிடையாது. 10 நிமிடத்தில் பெரு நகரத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்றால் முன்னாள் வேகத்தில் செல்ல வேண்டும். இந்த திட்டமே தவறு என்று பலர் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை இது தொடர்பாக சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது. போக்குவரத்து விதிகள் இதன் மூலம் மீறப்படாதா, இந்த திட்டம் எப்படி தீட்டப்பட்டது என்று சொமேட்டோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.

ஆலோசனை

இந்த நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில் குமார் முன் நேற்று சொமேட்டோ நிறுவன அதிகாரிங்கள் விளக்கம் அளித்தனர். அதில் சென்னையில் 10 நிமிட டெலிவரி திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று சொமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அப்படியே செய்தாலும் கூட முறையான முன் அறிவிப்புகளை போலீசுக்கு தெரிவிப்போம். காவல்துறையின் ஒத்துழைப்பிற்கு பின்பே எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்துவோம் என்று சொமேட்டோ பதில் அளித்துள்ளது.

English summary
No instant 10 minutes delivery in Chennai from Zomato after police asks clarification of the scheme. சென்னையில் 10 நிமிட டெலிவரி திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று சொமேட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/no-instant-10-minutes-delivery-in-chennai-from-zomato-after-police-asks-clarification-453056.html