மெட்ராஸ் ரேஸ் கிளப் ரூ.250 கோடி வரி பாக்கி – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை : ‘மெட்ராஸ் ரேஸ் கிளப்’ 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., செலுத்தாததால், 250 கோடி ரூபாய் வரை நிலுவை உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கிண்டியில், 160.86 ஏக்கர் பரப்பளவில், மெட்ராஸ் ரேஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. அரசிடமிருந்து குத்தகை அடிப்படையில் நிலம் பெற்று, இந்த கிளப் நடத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு செலுத்தும் குத்தகை கட்டணத்திற்கு, மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.ஆனால், 2017 முதல் ஜி.எஸ்.டி., செலுத்த வில்லை.
இதேபோல, ஊட்டியில் செயல்பட்டு வரும், மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகை கட்டணத்திற்கான ஜி.எஸ்.டி.,யும், ஐந்து ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை. இதனால், 250 கோடி ரூபாய் வரை வரி நிலுவை உள்ளது.வரி செலுத்த பலமுறை, ‘நோட்டீஸ்’ அளித்தும், பலன் இல்லை. எனவே, வரி வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க, உடனடியாக, 250 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

தனியார் நிலம் எடுப்பது இனி வெகு சிரமம் : மாற்று வழி தேடும் வீட்டு வசதி வாரியம்


தனியார் நிலம் எடுப்பது இனி வெகு சிரமம் : மாற்று வழி தேடும் வீட்டு வசதி வாரியம்

முந்தய

30 ஆயிரம் சுற்றுலா பயணியர் ஊட்டிக்கு வருகை


30 ஆயிரம் சுற்றுலா பயணியர் ஊட்டிக்கு வருகை

அடுத்து








வாசகர் கருத்து (1)



Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3036352