FAIL என்றால் என்ன? கலாமின் வார்த்தையை குறிப்பிட்டு தனது அனுபவத்தை பகிர்ந்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
தமிழகத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் படிப்பில் தோற்றால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரித்தவாறு உள்ளது. சமீப காலமாக செய்திகளில் பள்ளி மாணவி / கல்லூரி மாணவி மாடியில் இருந்து தற்கொலை என பல செய்திகள் வலம்  வந்த வண்ணம் உள்ளன. தேர்வு முடிவு வெளியானால் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை என ஒரு செய்தியாவது கடந்து செல்ல வேண்டிய சூழலில் உள்ளோம்.

இந்நிலையில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி.காமகோடி தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் F.A.I.L. என்றால் என்ன என்பது குறித்து மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் , அப்துல் கலாம் ஐயா ஏற்கனவே கூறியுள்ளார். F.A.I.L. என்றால் “first Attempt In Learning”.  நாம் படிப்பதற்கு எடுத்த முதல் முயற்சி தான் F.A.I.L. குறிப்பாக எனது வாழ்வில் நடந்த கதை ஒன்றை சொல்றேன். எனக்கு IIT மெட்ராஸ் சேர வேண்டும் என ரொம்ப ஆசை. 85ல் எனக்கு JE கிடைக்கல. அதன் பிறகு ஒரு முயற்சி எடுத்து 89ல் இதே இன்ஸ்டிடியூஷனில் எம்.எஸ் அட்மிசன் வாங்கினேன். குறிப்பாக நான் சொல்ல வேண்டுமானால் எனது பெற்றோர் இன்று வரை ஏன் உனக்கு JE கிடைக்க வில்லை என கேட்கவில்லை. 1985-2022 வரையில் எங்க அப்பாவோ , அம்மாவோ கேட்டதில்லை. அதனால் பெற்றோர்கள் ஒத்துழைப்பு இதில் முக்கியமாகத் தேவைப்படுகின்றது.

[embedded content]

3 வருட பயிற்சியோ , 4 வருட பயிற்சியோ அதன் மேல் ஒரு நல்ல உந்துதலோட படிச்சாங்கனா நிச்சயமாக வெற்றி பெறலாம். ஒரு 4 வருடம் நன்றாக படித்தோமானால் நாம் உலகத்தை கேட்கலாம் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ” என .  அதனால் தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல.

Published by:Sankaravadivoo G

First published:

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://tamil.news18.com/news/education/v-kamakoti-iit-madras-director-says-suicide-is-not-the-solution-780898.html