சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழகத்தில் தழைத்து வளர தமிழக அரசின் கொள்கை அடிப்படையில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை (இரண்டு இடங்கள்), திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூரில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை (எல்கோசெஸ்கள்) உருவாக்கி உள்ளது.

* எல்காட் மதுரை மாவட்டம் வடபழஞ்சி மற்றும் கிண்ணிமங்கலம் கிராமங்களில் 245.17 ஏக்கர் பரப்பளவில் ஒரு எல்கோசெஸ்ஸை நிறுவியுள்ளது.  
* எல்காட் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 200.04 ஏக்கர் பரப்பளவில் ஒரு எல்கோசெஸ்ஸை நிறுவியுள்ளது.  
* எல்காட் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் விஸ்வநாதபுரம் கிராமத்தில் 174.04 ஏக்கர் பரப்பளவில் நிறுவியுள்ளது.  

மேற்கூறிய எல்கோசெஸ்ஸில் எல்காட் அனைத்து பொது உட்கட்டமைப்பு வசதிகளான உட்புற சாலைகள், மழை நீர் வடிகால்வாய் வசதிகள், நடைபாதைகள், தரவு கேபிள் அகழி, மின் கேபிள் அகழி, நுழைவாயில், சுற்றுபுற சுவர் போன்றவற்றை முறையே எல்கோசெஸ் மதுரைக்கு ரூ.60.4 கோடி செலவிலும் எல்கோசெஸ் திருநெல்வேலிக்கு ரூ.31.82 கோடி மற்றும் எல்கோசெஸ் ஓசூருக்கு ரூ.41.39 கோடி செலவில் ஏற்படுத்தியுள்ளது.

இங்கு அமையும் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மூலம் இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று மேற்கூறிய 6 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். முன்னதாக எல்காட் நிறுவனத்தின் சார்பில் 233வது நிரந்தர ஆதார் மையம் கருவூலம் மற்றும் கணக்கு துறை பேராசிரியர் அன்பழகன் மாளிகை நந்தனத்தில் உள்ள தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் எல்காட் நிறுவன மேலான்மை இயக்குனர் பிரவீன் பி  நாயர் மற்றும் அருண்ராஜ் செயல் இயக்குனர் விஜயேந்திர பாண்டியன், கருவுல கணக்கு துறை ஆணையர் கலந்து கொண்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjgwMzbSAQA?oc=5