சென்னையில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா?…2020, 2021, 2022 ஆண்டுகள் ஓர் ஒப்பீடு..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டுகளை விட குற்றங்கள் குறைவாக நடந்திருப்பதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது

கொலைகள் :

கடந்த 2020-ம் ஆண்டு 93 கொலைகள் நடைபெற்றுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு 94 கொலைகள் நடந்துள்ளது. 2022 ஆண்டு 97 கொலைகள் நடந்துள்ளது. இவற்றுள் ஆதாய கொலை 2020-ம் ஆண்டு 2 கொலைகளும், 2021 ஆம் ஆண்டு 10 கொலைகளும், 2022 ஆம் ஆண்டு 4 கொலைகளும் நடந்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)

சென்னை

சென்னை

முன் விரோத கொலைகள்:

மேற்கண்ட கொலை சம்பவங்களில் முன் விரோத கொலை வழக்குகளை பொருத்தவரையில் 2021-ம் ஆண்டில் 36 கொலைகளும், 2022-ம் ஆண்டில் 20 கொலைகளும் நடைபெற்றுள்ளன. முன் விரோத கொலைகள் கடந்த ஆண்டுகளை விட குறைந்திருப்பதாகவும், குற்றவாளிகள் கண்காணிப்பில் இருப்பதால் முன் விரோத கொலை சம்பவங்கள் குறைந்து இருப்பதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது

கொள்ளை சம்பவங்கள்

2020 மற்றும் 2021 ஆண்டுகளை ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டு 17 கொள்ளை வழக்குகள், 2021ம் ஆண்டு 15 கொள்ளை வழக்குகள், 2022 ம் ஆண்டு 11 கொள்ளை வழக்குகளும் நடந்துள்ளன.

வழிப்பறி சம்பவங்கள்: 

வழிப்பறி சம்பவங்களும் முந்தை ஆண்டுகளை விட 2022 ஆம் ஆண்டு குறைந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு 470 வழிப்பறி சம்பவங்களும், 2021-ம் ஆண்டு 253 வழிப்பறி சம்பவங்களும், 2022-ம் ஆண்டு 230 வழிப்பறி சம்பவங்களும் நடந்துள்ளது.

அதிக மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டவை :

அதிக மதிப்பிலான பொருட்கள் திருடிய வழக்குகள் கடந்த ஆண்டு சற்று அதிகமாக உள்ளது. அதன்படி, 2020ம் ஆண்டு 30 திருட்டுகள், 2021ம் ஆண்டு 29 திருட்டுகள், 2022-ம் ஆண்டு 35 திருட்டுகள் நடந்துள்ளது.

குறைந்த மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டவை :

2020-ம் ஆண்டு 472 திருட்டு வழக்குகளும், 2021-ம் ஆண்டு 430 திருட்டு வழக்குகளும், 2022-ம் ஆண்டு 503 திருட்டு வழக்குகளும் நடந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட சொத்து வழக்குகள் :

2020-ம் ஆண்டு 84 சதவீதம் சொத்து வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு 78 சதவீதம் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு 75 சதவீத சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இவற்றுள் மீட்கப்பட்டவை :

இழந்த சொத்துக்களை மீட்பதிலும் கடந்த ஆண்டு அதிகமாக உள்ளது. 2020 – ம் ஆண்டு 50 சதவீதம் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு 59 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு 72 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihQFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9jaGVubmFpL2NyaW1lLXJhdGUtZGVjcmVhc2VkLWluLWNoZW5uYWktd2hlbi1jb21wYXJlZC10by1wYXN0LXR3by15ZWFycy1zYXlzLWNoZW5uYWktcG9saWNlLTg2OTEwMC5odG1s0gGJAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9jaGVubmFpL2NyaW1lLXJhdGUtZGVjcmVhc2VkLWluLWNoZW5uYWktd2hlbi1jb21wYXJlZC10by1wYXN0LXR3by15ZWFycy1zYXlzLWNoZW5uYWktcG9saWNlLTg2OTEwMC5odG1s?oc=5