சென்னையில் நாட்டுப்புற கலைகளோடு அரங்கேறும் நம்ம ஊரு திருவிழா… நேரில் கண்டு ரசித்த முதலமைச்சர் ஸ்டாலின் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

கடந்த 13ம் தேதி தொடங்கிய “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” சென்னையில் 18 இடங்களில் பொதுமக்களின் வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 600க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் புத்துணர்ச்சியோடு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர். சென்னை சங்கமத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து என பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன. இதனால் வறுமையில் வாடும் ஏராளமான கலைஞர்களுக்கு வருமானமும் கூடவே, மக்களின் பாராட்டும் கிடைத்து வருகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ள சென்னை சங்கம நிகழ்வின் 3-ம் நாள் விழா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் விமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். அவர் உடன் அமைச்சர் மா சுப்பிரமணியன், எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கரகாட்டம் , நீலகிரி உதயகுமார் குழுவினர் நடத்திய கோத்தர் நடனம், கவின் கலை பல்கலைகழக மாணவர்களின் இசை நிகழ்ச்சி, சென்னை சங்கமம் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த ஆந்தை குழி இளையராஜா, கிடாக்குழி மாரியம்மா, லட்சுமி பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாரம்பரிய நிகழ்வுகள் களைகட்டின. கலைஞர்களின் துடிப்பான பங்கேற்பால் அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தது ரசிப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMieWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9uZXdzL3RhbWlsLW5hZHUvdGhlLWNoZW5uYWktc2FuZ2FtYW0tbmFtbWEtb29ydS10aGlydXZpemhhLWNtLW1rLXN0YWxpbi1wYXJ0aWNpcGF0ZWQtODczMzIzLmh0bWzSAX1odHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvdGFtaWwtbmFkdS90aGUtY2hlbm5haS1zYW5nYW1hbS1uYW1tYS1vb3J1LXRoaXJ1dml6aGEtY20tbWstc3RhbGluLXBhcnRpY2lwYXRlZC04NzMzMjMuaHRtbA?oc=5