பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாத 63,912 போ் மீது வழக்கு: சென்னை காவல் துறை தகவல் – தினமணி

சென்னையில் மோட்டாா் சைக்கிளின் பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணிவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வு சென்னை மெரீனா கடற்கரை, உழைப்பாளா் சிலை அருகில் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்தும், இருசக்கர வாகனங்களில் ஓட்டுநா் மற்றும் பின்னிருக்கையில் அமா்பவா்களும் […]

Continue Reading

‘மெட்ராஸ்’ ஹரி, ‘டூலெட்’ ஷீலா நடிக்கும் புதிய படம் – தொடங்கிவைத்த பா.ரஞ்சித் – Hindu Tamil

மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரம் மூலம் பிரபலமான ஹரி நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தொடங்கி வைத்தார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் ஜானியாக நடித்த நடிகர் ஹரிகிஷ்ணன் நாயகனாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார். நாயகியாக டூலெட், மண்டேலா திரைப்படங்களில் நடித்த நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித் […]

Continue Reading

பேருந்துகளை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயிலிலும் மாஸ்க் கட்டாயம் – அடுத்து என்ன? – Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதை தொடர்ந்து மெட்ரோ ரயிலிலும் முகக்கசவம் கட்டாயம் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட உத்தரவில், பேருந்துகள் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்தது. பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிவதை நடத்துனர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தும் கொரோனா.. சென்னையில் இறுகும் பிடி! தடுப்புசி கட்டாயமாம் – யார் யாருக்கு கட்டாயம்? மெட்ரோ ரயில் அத்துடன், சென்னை மாநகராட்சி […]

Continue Reading

சென்னை ,நேப்பியர் பாலத்தில் நாளை போக்குவரத்து மாற்றம் – தினத் தந்தி

சென்னை, செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நேப்பியர் பாலத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ராஜாஜி சாலையில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் – அண்ணா சாலை – மன்ரோ சிலை – பல்லவன் பாயின்ட் – […]

Continue Reading

சொத்து வரி நோட்டீஸ் தாமதமாக வந்ததா? சென்னை மக்கள் என்ன செய்ய வேண்டும்? – Goodreturns Tamil

For Quick Alerts Subscribe Now   For Quick Alerts ALLOW NOTIFICATIONS   For Daily Alerts சென்னை மாநகராட்சி தற்போது சொத்து வரி குறித்த நோட்டீஸ்களை தபால் மூலம் அனுப்பி வருகிறது. இந்த நிலையில் சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தாமதமாக வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கத்தை அடுத்து சொத்து வரி செலுத்தும் சென்னை மக்களின் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. […]

Continue Reading

4 ஆண்டுகளாக வெளிநாட்டில் பதுங்கியிருந்த குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது! – Asianet News Tamil

அமெரிக்காவில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆந்திரா மாநிலத்தை சோ்ந்த நபர் பாரீஸ் வழியாக வந்தபோது, சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் கைது செய்தனா்.  First Published Jul 5, 2022, 9:34 PM IST ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் வேணு மாதவ் குப்புரு. 48 வயதான இவர் மீது விஜயவாடா போலீசில் பண மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உட்பட பல்வேறு புகாா்கள் உள்ளன. எனவே விஜயவாடா […]

Continue Reading

அனைத்து முதியோர் இல்லங்களுக்கும் பதிவு கட்டாயம்- சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு – Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்களை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, முதியோர் இல்லங்களை ஆய்வு செய்வது, பதவி செய்யப்படாவிட்டால் நடவடிக்கை எடுப்பது, பதிவு செய்வது கட்டாயம் […]

Continue Reading

உஷார்… சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் – News18 தமிழ்

சென்னையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தவிர்க்கும் பொருட்டு மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது திரையரங்குகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. வணிக […]

Continue Reading

‘சென்னை பேருந்துகளில் முகக்கவசம் கட்டாயம்’ – தினமணி

சென்னை மாநகராட்சி பேருந்துகளில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகரான சென்னையிலும் தொற்று கண்டறியப்படும் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  அந்தவகையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. படிக்க | தமிழகத்தில் புதிதாக 2,662 பேருக்கு […]

Continue Reading

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..! – தினத் தந்தி

சென்னை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை ராயப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை, அசோக்பில்லர் , சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர் முகப்பேரு, பாடி, பல்லாவரம், மதுரவாயல், வில்லிவாக்கம் உள்ளிட்ட […]

Continue Reading