UNOM: சென்னைப் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பால் சென்னைப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றதலை கட்டுப்படுத்தும் விதமாக, ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கல்வி நிறுவனங்களும் மே 3 ஆம் தேதி வரையில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Also Read This:

  • இப்படி வெளியே வந்தால், TNPSC போன்ற தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறுவது கஷ்டம்!
  • ஹார்வர்டு பல்கலை.யில் சான்றிதழுடன் கூடிய இலவச ஆன்லைன் படிப்பகள்.. நீங்களும் படிக்கலாம்!

இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் நேற்று (ஏப்.15) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ‘நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகமும் மே 3 ஆம் தேதி வரையில் மூடப்பட்டிருக்கும்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த எழுத்துத்தேர்வு, செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்ததாக இந்த தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். பேராசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வீட்டிலிருந்தபடியே தங்களுடைய பணிகளை செய்ய வேண்டும். மேலும், பல்கலைக்கழகம் எப்போது அழைத்தாலும், பல்கலைக்கழகத்துக்கு வரத் தயாராக இருக்க வேண்டும்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamil.samayam.com/education/news/madras-university-has-postponed-semester-exam-april-2020-until-further-notice/articleshow/75175810.cms