28 நாட்களாக கொரோனா பரவல் இல்லை.. சென்னை கண்டெய்ண்மென்ட் பகுதிகளில் இருந்து ஒரு குட் நியூஸ் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கண்டெய்ன்மென்ட் பகுதிகளில் சில இடங்களில் கடந்த 28 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. வெளியில் இருந்து யாரும் உள்ளே வந்து கொரோனா பரப்பாதது, உள்ளே உள்ள மக்கள் தீவிர சமூக இடைவெளியை கடைபிடித்தது போன்றவை இந்த வெற்றிக்கு காரணம்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பாதிப்பு 200ஐத் தாண்டியுள்ளது. அதாவது, 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பரவாவிட்டால், அது பசுமை மண்டலம் என்ற பகுதியாக கருதத் தக்கது. அப்படி சாதித்த பகுதிகள் இவைதான்:

  • மதுரவாசல் தெரு
  • டேவிட்சன் தெரு
  • வரதராஜன்பேட்டை (சூளைமேடு)
  • வேணுகோபால் தெரு, சைதாப்பேட்டை
  • எல்லையம்மன் கோவில் தெரு, கோட்டூர்புரம்
  • நேரு தெரு, கல்குட்டி, பெருங்குடி
  • எம்ஜிஆர் நகர், பனையூர்

இவ்வாறு அந்த பட்டியல் உள்ளது. அதேநேரம் இவை சென்னை நகரப் பகுதிகளுக்குள் வருவதால், பசுமை மண்டலம் என அழைக்க முடியாது. ஆனால் இந்த பகுதிகள் பின்பற்றிய பாதுகாப்பு நடைமுறைகளை, பிற பகுதிகள் பின்பற்றி, வெற்றிகாண முடியும்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/no-case-is-reported-in-some-containment-zones-in-the-past-28-days-in-chennai-384234.html