சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று அனல் காற்று.. 11.30 முதல் 3.30 மணிவரை மக்கள் வெளியே வர வேண்டாம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும். குறிப்பிட்ட நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்கள் மழை பெய்யும்.

கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

imageதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ குழுவுடன் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை நிலவரம்

அதேபோல ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் வெளியே போக வேண்டாம்

காலை 11.20 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை, இந்த 6 மாவட்ட பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேற்றைய நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில், அதிகபட்சமாக, 96.63 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அனல்காற்று தொடர்பாக வடமாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் ஆரஞ்சு அலர்ட்டாக குறைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. நேற்று ராஜஸ்தானில் அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. வட மாநிலங்கள் பலவற்றிலும் 40 டிகிரி செல்சியசை விட அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

வட கிழக்கில் மழை

அதேநேரம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/heat-waves-will-be-in-6-districts-in-tamilnadu-including-chennai-meteorological-department-386557.html