வெளிமாநில பயணிகளுக்கு வழிகாட்ட திட்டம்.. சென்னை ஏர்போட்ட் பணியில் இந்தி தெரிந்த தமிழக போலீசார்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஏர்போர்ட்டில் வெளி மாநில பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தி தெரிந்த தமிழக போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஜூன் பாதியில் அல்லது ஜூலை இறுதிக்குள் தொடங்கப்படும் மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. இன்னொரு பக்கம் உள்நாட்டு விமானம் தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்று முதல் நாள் விமான சேவை தொடங்கியது.

சென்னை டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் விமான சேவை தொடங்கி உள்ளது. சென்னையில் தினமும் 25 விமானங்கள் மட்டுமே வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து பலர் வடமாநிலங்களுக்கு விமானத்தில் செல்கிறார்கள். இந்தி மட்டுமே தெரிந்த பலர் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விதிகள் காரணமாக குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஏர்போர்ட்டில் வெளி மாநில பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தி தெரிந்த தமிழக போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

விமானம் எப்போது செல்லும், எப்படி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், தாமதமாக செல்லும் விமானம் எது என்பதை இந்தியில் தமிழக போலீசார் தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையத்திற்கு உள்ளே சிஆர்பிஎப் வீரர்கள் வழிகாட்டி வருகிறார்கள்.

imageஎதிர்ப்பு எதிரொலி.. அரசு முகாமில் தங்க ஏழைகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.. பினராயி அறிவிப்பு!

தமிழக போலீசாரின் இந்த முன்னெடுப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-police-who-know-hindi-are-guiding-people-in-chennai-airport-386759.html