சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து சலூன் கடை திறக்க நடவடிக்கை – தமிழக அரசு உறுதி – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.


கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதியில் இருந்து, முடித்திருத்தம் செய்யக்கூடிய சலூன் கடைகள் செயலபட தடை விதிக்கப்பட்டது.

நளினி, முருகன் வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது – சிறைத் துறை

தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ஊரடங்கிற்கு முன்னதாக மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடித்திருத்த தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேல் எந்த வித வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முடித்திருத்த தொழிலாளருக்கும், தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். முடித்திருத்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே மே 23ம் தேதி தமிழ அரசு அறிவிப்பை அடுத்து சென்னையை தவிர மற்ற இடங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சென்னையில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும் சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 12 பேர் பலி

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர், சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து சலூன் கடையை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/saloon-shops-in-chennai-government-madras-high-court-194749/