கொரோனாவை கண்டறிய ரிஸ்ட்பேன்ட்.. ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்டப் ரூ.22 கோடி திரட்டல்..! – Goodreturns Tamil

சென்னைச் செய்திகள்
For Quick Alerts
Subscribe Now
 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
 

For Daily Alerts

ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்டப் நிறுவனமான Muse Wearables நிறுவனம் ஆரம்ப கட்டத்திலேயே கொரொனா வைரஸின் அறிகுறியினை கண்டுபிடிக்க, ஒரு ரிஸ்ட்பேன்டினை உருவாக்குவதற்கு 22 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளது.

இந்த ரிஸ்ட்பேன்டின் விலை 3,500 ரூபாயாகும். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 70 நாடுகளில் உள்ள நுகர்வோருக்கு இந்த வாட்ச் கிடைக்கும் என்றும் இந்த ஸ்டார்டப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை அணியக்கூடிய டிராக்கரில் தோல் வெப்ப நிலை, இதய துடிப்பு, மற்றும் SpO2 அல்லது ரத்த ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை அறிவதற்கான சென்சார்கள் உள்ளனவாம்.

கொரோனாவை கண்டறிய ரிஸ்ட்பேன்ட்

ஆக இந்த ரிஸ்ட்பேன்ட்மூலம் கொரோனா அறிகுறிகளை முன்னரே கண்டறிய முடியும் என்கிறது இந்த ஸ்டார்டப். நடப்பு ஆண்டில் இரண்டு லட்சம் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 2022ம் ஆண்டிற்குள் 10 லட்சம் பொருட்களை விற்பனையை இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.

நிதி திரட்டிய ஸ்டார்டப்

நிதி திரட்டிய ஸ்டார்டப்

மேலும் முதலீட்டாளர்கள் எங்களது கண்டுபிடிப்புகளை நம்புகிறார்கள். ஆக நுகர்வோர் தொழில் நுட்பத்தில் பெரிய வித்தியாசத்தினை உருவாக்க முடியும் என்றறு நம்புகிறார்கள். ஆக இதற்காக எங்களால் 22 கோடி ரூபாய் நிதியினை திரட்ட முடிந்தது என்று ஐஐடியின் முன்னாள் மாணவரான கே எல் என் சாய் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

புளூடூத் வசதியும் உண்டு

புளூடூத் வசதியும் உண்டு

மேலும் இந்த ரிஸ்ட்பேன்டினைபுளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுடம் இணைக்கலாம். பயனர்களின் உயிரணுக்கள் மற்றும் செயல்பாட்டுத் தரவு தொலைபேசியிலும் சேவையகத்திலும் இயக்கப்படும். பயணர்கள் எந்தவொரு சிரமத்தினையும் எதிர்கொள்ளும் போது அவசர எச்சரிக்கையினை பயன்படுத்தலாம்.

ஆக இதன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதை முன்னரே அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தங்களை தனிமைபப்டுத்திக் கொள்ளவே அல்லது மருத்துவ சிகிச்சையினையே விரைவில் பெற முடியும். நல்ல விஷயம் தான் இது.

பெருமை தரக்கூடிய விஷயமே

பெருமை தரக்கூடிய விஷயமே

உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை கண்டறிய சில கருவிகள் இருந்தாலும், அதன் முடிவுகள் வர கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், பரிசோதனைக்கான செலவும் அதிகமாக உள்ளது. இந்த கவலையை போக்க சென்னை ஐஐடி சேர்ந்த ஸ்டார்டப் நிறுவனம், ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ரிஸ்ட்பேன்டினைஉருவாக்கியுள்ளது மிக பெருமை தரக்கூடிய ஒரு நல்ல விஷயமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed

Source: https://tamil.goodreturns.in/news/iit-madras-startup-development-of-wristband-product-detect-coronavirus-019926.html