மதுரை, நெல்லை, ராமேஸ்வரம், செங்கோட்டைக்கு சென்னையில் இருந்து நாளை முதல் தினசரி ரயில்கள்.. விவரம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாளை முதல் கூடுதலாக தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை, நெல்லை, ராமேஸ்வரம், செங்கோட்டை, கொல்லம் , ஆழப்புழா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. அவற்றின் நேர விவரத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூர், சென்ட்ரலில் இருந்து 7 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் விவரும் வருமாறு: சென்னை எழும்பூர்-நெல்லை இடையே நெல்லை எக்ஸ்பிரஸ் (ரயில் 02631) நாளை முதல் தினமும் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மாம்பலம், தாம்பரம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லைக்கு மறுநாள் காலை 6.45 மணிக்கு சென்றடையும்.

அதைப்போன்று மறுமார்க்கமாக நெல்லை- எழும்பூர் இடையே (ரயில் 02632) வருகிற 5ம் தேதி இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 6.35 மணிக்கு வந்தடையும்.

imageசென்னை முதல் கன்னியாகுமரி வரை.. இன்று முதல் எங்கிருந்தும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்!

இரவு 8.40 மணிக்கு

மேலும் சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே பொதிகை எக்ஸ்பிரஸ் (ரயில் 02661) வருகிற 3ம் தேதி முதல் தினமும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், திருச்சி, மதுரை, தென்காசி வழியாக மறுநாள் காலை 8.30 மணி அளவில் செங்கோட்டைக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக செங்கோட்டையில் இருந்து (ரயில்எண் 02662) மறுநாள் இரவு 6.10 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு காலை 6 மணி அளவில் வந்தடையும்.

காலை புறப்படும்

மேலும் சென்னை எழும்பூர்- மதுரை இடையே தேஜஸ் (ரயில் எண் 02613) அக்டோபர் 2ம் தேதி முதல் செவ்வாய்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சி, கொடைக்கானல் ரோடு வழியாக மதுரைக்கு பிற்பகல் 12.20 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து (ரயில் எண் 02614) அன்று பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக மதுரைக்கு இரவு 9.30 மணி அளவில் சென்றடையும்.

மாலை 5.45 மணிக்கு

அதைப்போன்று சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே சிறப்பு (ரயில்எண் 02205) நாளை முதல் தினமும் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், அரியலூர், காரைக்குடி, பரமக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு மறுநாள் காலை 4.25 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் (02206) வருகிற 5ம் தேதி முதல் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணி அளவில் எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தடையும். அதைப்போன்று எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் (06723) வரும் 3ம் தேதி முதல் தினமும் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மாம்பலம், திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் வழியாக கொல்லத்திற்கு மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு கொல்லத்திற்கு சென்றடையும். அதைப்போன்று கொல்லத்தில் இருந்து ரயில் (06724) மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு அதேவழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 8.10 மணி அளவில் வந்தடையும்.

காரைக்கால் எர்ணாகுளம் ரயில்

மேலும் சென்னை சென்ட்ரல்- ஆலப்புழா-சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில் (02639,02640) நாளை முதல் தினமும் இயக்கப்படுகிறது. அதைப்போன்று காரைக்கால்- எர்ணாகுளம்- காரைக்கால் இடையே சிறப்பு ரயில் (06187, 06188) வரும் 4ம் தேதி முதல் தினமும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முககவசம் கட்டாயம்

ஏற்கனவே 13க்கும் மேற்ப்பட்ட சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில் ரயில்களின் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பயணிகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அனைத்து பயணிகளும் பயண நேரத்துக்கு 90 நிமிடங்கள் முன்னாள் ரயில் நிலையம் வர வேண்டும். பயணம் செய்யும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையத்திலும், பயணத்தின்போதும் சமூக இடைவெளியை பயணிகள் கடைபிடிக்க வேண்டும்” என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/southern-railway-will-run-special-trains-from-chennai-to-various-parts-of-tamil-nadu-from-tomorrow-399197.html