சென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு?.. சொல்கிறது விண்டி செயலி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் அதிகாலை 2 மணிக்கு நல்ல மழை பெய்யும் என தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது. என்னதான் தனியார் வானிலை நிறுவனங்கள் கூறினாலும் சென்னை வானிலை மையம் இதுகுறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கவுள்ளது. அந்த பருவமழை தொடங்குவதற்கு எப்போது சாதகமான சூழல் நிலவுகிறது என்பது தெரியவில்லை. ஆனால் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என கூறுகிறார்கள்.

இன்று மாலை 4 மணிக்கெல்லாம் சென்னையில் கும்மிருட்டு சூழந்தது. அப்போது பலத்த இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலான நல்ல மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 செமீ மழை பெய்தது.

imageநாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி!

அண்ணாநகர்

முகப்பேர், அண்ணாநகர், நுங்கம்பாக்கத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஒரு மணி நேரத்தில் இத்தகைய மழையை மக்கள் எதிர்பார்க்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்றாலும் அலுவலகங்களை விட்டு வெளியேறுவோர் கடும் அவதிப்பட்டனர்.

விண்டி டிவி

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக விண்டி டிவி எனும் தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விண்டி டிவியில் செயற்கைகோள் படம் விளக்கியுள்ளது.

கேளம்பாக்கம்

அதில் மறைமலை நகர், கேளம்பாக்கம், தண்டலம், செங்கல்பட்டு, மகாபலிபுரம், கல்பாக்கம், மதுராந்தகம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும். அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் இந்த மழை காலை 5 அல்லது 6 மணிக்கு முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்ல மழை

அதிலும் 30 மி.மீ. மழை பெய்யும் என்பதால் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது. அரக்கோணம், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கண்ட பகுதிகளில் காலை 8 மணிக்கு இயல்பு நிலை திரும்பும் என தெரிகிறது. என்னதான் தனியார் வானிலை நிறுவனங்கள் கூறினாலும் சென்னை வானிலை மையம் இதுகுறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/windy-app-says-about-heavy-rain-at-2-am-401129.html