சென்னை: அளவுக்கு அதிகமாக வைட்டமின் மாத்திரைகள்; ஆபத்தான நிலையில் குழந்தை! – மீட்ட அரசு மருத்துவர்கள் – Vikatan

சென்னைச் செய்திகள்

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் குமரேசன், இவரின் மனைவி கனிமொழி. இந்தத் தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை பவ்யா. கனிமொழி வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்டுவந்தார். வைட்டமின் மாத்திரைகள் குழந்தை பவ்யாவின் கைக்கு எட்டும் இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால், அதை எடுத்த பவ்யா, அவற்றில் சில மாத்திரைகளைச் சாப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.

குழந்தை
representational image

உடனடியாக பவ்யாவை கள்ளக்குறிச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குமரேசனனும் கனிமொழியும் அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை அளவுக்கு அதிகமாக மாத்திரகளைச் சாப்பிட்டதைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், குழந்தையின் உடல்நலம் மோசமானதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கும், அங்கிருந்து புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனைக்கும் பவ்யா கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/chennai-doctor-saves-kids-from-danger-situation