பிரதமர் வருகை: சென்னையில் நாளை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார்.

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வருகிறார். காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் நரேந்திர மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வழித்தடங்களில் நாளை காலை முதல் மதியம் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்து போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி 14.02.2021 அன்று காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.

  • கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.
  • மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்கண்டபடி திருப்பி விடப்படும்.
  • கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  •  இராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
  • அண்ணாசாலையிலிருந்து இராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
  •  சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
  • இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்ப வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2021/02/13125227/Traffic-diversions-to-be-in-place-in-and-around-Chennai.vpf