சென்னை: `ரூ.19 லட்சம் இன்சூரன்ஸுக்காக ரூ.2 கோடியை இழந்த ஆசிரியை! -டெல்லி கும்பல் சிக்கியது எப்படி? – Vikatan

சென்னைச் செய்திகள்

அங்கு தலைமறைவாக இருந்த மோசடி கும்பலைச் சேர்ந்த டெல்லியைச் சேர்ந்த அமன்பிரசாத் (29), பிரதீப்குமார் (29), மனோஜ்குமார் (44), குபீர்சர்மா என்கிற பிரின்ஸ் (27), ஹீமன்சு தாஹி (25), ராம்பால் (30) ஆகிய 6 பேரை போலீஸார் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது டெல்லியில் லைன் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருவதாக இவர்கள் கூறி சுதா ஸ்ரீதரனை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீஸ் டீம்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் பேசுவார்கள். அப்போது உங்களின் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சியடைந்து விட்டது. அதனால் அந்தப் பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்த வங்கி தொடர்பான விவரங்கள் வேண்டும் என்று கூறுவார்கள். பின்னர், பாலிசியின் முதிர்ச்சி தொகையை வங்கி கணக்கில் செலுத்த முன்பணமாக நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறுவர். அதை நம்பி பணம் செலுத்தியபிறகு மோசடி கும்பல் தங்களின் செல்போன் நம்பரை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அடுத்த நபருக்கு வலைவரிக்க தொடங்கிவிடுவார்கள். இன்சூரன்ஸ் பாலிசி முதிர்ச்சியடைந்து விட்டதாகக் கூறி மோசடி செய்த இவர்கள் போலி முகவரி, பெயர்களை கூறியிருக்கின்றனர். இருப்பினும் வங்கி கணக்கு விவரத்தை வைத்து இந்தக் கும்பலை கைது செய்திருக்கிறோம். கைது செய்யப்பட்ட இவர்கள் எத்தனை பேரிடம் மோசடி செய்திருக்கிறார்கள் என்று விசாரித்து வருகிறோம்” என்றனர்.

இந்த வழக்கை சிறப்பாக விசாரித்த துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம், எஸ்.ஐ பிரேம்குமார், சுரேஷ்குமார், தலைமை காவலர்கள் ஸ்டாலின் ஜோஸ், நிஷா, முதன்மை காவலர்கள் சுபஜாராணி, காவலர்கள் மோகன், இளங்கோவன், ஏழுமலை மற்றும் காவலர்களை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். அப்போது, பொதுமக்கள் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளை நம்பி எந்தவித பணப்பரிவர்த்தணைகளை செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார்.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-fraud-team-from-delhi-who-were-cheated-in-name-of-insurance