75000 கோவாக்சின் தடுப்பூசிகள் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்தது – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிகமாகி வருவதல் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதையடுத்து பிரதமா் மோடி உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கோவக்சின் தடுப்பு பல இடங்களில் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளதால் அதிக அளவில் அனுப்பி வைக்க தமிழக அரசு கோரியது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து 75000 டோஸ் கோவக்சின் தடுப்பூசி மருந்துகள் அடங்கிய 16 பாா்சல்களாக ஏற்றிக்கொண்டு விமானம் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த விமானம் காலை 9 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.
விமானத்தில் இருந்து மருந்து பாா்சல்களை இறக்கி கண்டெய்னா் வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மருத்துவ தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதுப்போல் 2 லட்சம் கோவிட்ஷில்டு தடுப்பூசி சென்னைக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/75000-covaxin-vaccines-came-to-chennai-from-hyderabad-vjr-457779.html