விமான படை ஹெலிகாப்டா்கள் சென்னை விரைந்தன…. 1 டன் பார்சலில் இருந்தது என்ன? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயைத் தடுத்து மக்களை காக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளார்.

இதன் பலனாக கொரோனா நோய் பரவல் ஓரளவுக்கு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழக அரசு வரவழைக்கிறது. இதற்கு இந்திய விமானப்படை விமானங்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

அந்தவகையில் இந்திய விமானப் படை ஹெலிகாப்டா்கள் தற்போது சென்னைக்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டு வர தொடங்கி உள்ளன. அதன்படி சூலூரில் இருந்து இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டா்கள் நேற்று சென்னை பழைய விமான நிலையம் வந்தன.

இந்த ஹெலிகாப்டர்களில் 1,070 கிலோ எடை கொண்ட முகக்கவசங்கள், கொரோனா பரிசோதனை இயந்திரங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன. இவ்வாறு கொண்டு வரப்பட்ட உபகரணங்களை விமான நிலைய அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி…பாஜகவை விளாசும் கி. வீரமணி!

பின்னர் அவை அனைத்தும் வேன்கள் மூலம் சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோன்று ஹாங்காங், சீனா நாடுகளில் இருந்தும் சென்னை விமான நிலையத்துக்கு 2 சரக்கு விமானங்களில் 55 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த மருத்துவ உபகரணங்களுக்கு விமான நிலைய சுங்க துறை அதிகாரிகள் தாமதமில்லாமல் முன்னுரிமை அளித்து சோதனைகளை முடித்துக் கொடுத்து அனுப்பி வைத்தனா். இதன் மூலம், கொரோனாவை ஓரளவுக்கு நிலைமையை சமாளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/1-tonne-of-medical-equipment-has-arrived-in-chennai-by-indian-air-force-helicopters-/articleshow/83058629.cms