ரேசன் கடைகளுக்கு பருப்பு கொள்முதல் டெண்டர்.. தடையைத் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பொது விநியோகத் திட்டத்திற்காகப் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு மதுரை கிளை விதித்த தடையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியிட்டது. இந்த டெண்டருக்கு தடை விதிக்க கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், முந்தைய நிபந்தனைகளைப் பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், முந்தைய நிபந்தனைகள் படி, டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கடைசி 3 ஆண்டுகளில் 71 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் கொண்டிருக்க வேண்டும்.. ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் என விற்றுமுதல் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை, தமிழக அரசின் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசுத்தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் முறையிடப்பட்டது.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி ,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரர் மணிகண்டன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பருப்பு கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை வழக்கைத் தள்ளுபடி செய்து செய்து உத்தரவிட்டனர். அரசின் மேல்முறையீடு மனுவை முடித்து வைத்தனர்.

English summary
Chennai high court latset

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-lifts-of-the-ban-for-the-ration-shop-tender-422639.html