கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம் – சென்னை, கோவை மாநகராட்சியின் புதிய உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா மூன்றாவது அலை காலத்தில் 12% குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 12,667 படுக்கைகள் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா 3வது அலை ஒரே மாதத்தில் வர வாய்ப்புள்ளதால், மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த மே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகள் நிரம்பின. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2 ஆயிரமாக உள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நூறுக்கும் மேல் பதிவாகி வருகிறது. கொரோனா 3 அலை பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 12,667 படுக்கைகள் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைக்கு 3,810 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை அல்லாமல் ஆக்சிஜன் மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு என 7,390 படுக்கைகள் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆக்சிஜன் அல்லாத மருத்துவமனை கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு என 1,467 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 12 சதவிகிதம் குழந்தைகளாக இருப்பார்கள் என்றும் அதில் 5% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. இந்த கணக்கீட்டின் அடிப்படையில் தமிழகத்தில் குழந்தைகள் சிகிச்சைக்கு வசதிகள் ஏற்பாட்ய் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 12,667 படுக்கைகள் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தீவிர சிகிச்சைக்கு 3,810 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை அல்லாமல் ஆக்சிஜன் மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு என 7,390 படுக்கைகள் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆக்சிஜன் அல்லாத மருத்துவமனை கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு என 1,467 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ கிரேட் – 300 முதல் 400 படுக்கை வசதிகள் கொண்ட 5 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. பி கிரேட்- அடுத்ததாக தலா 250 படுக்கைகள் கொண்ட 15 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. சி கிரேட்- 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை வழங்குவது குறித்து திட்டமிடவும் கண்காணிக்கவும் 15 பேர் கொண்ட பிரத்யேக குழு task force தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா முன்னேற்பாடுகள்

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோவை மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக் கூறியுள்ளார்

கோவை மாவட்டத்தில் கொரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவிகிதமாக இருப்பதால், கோவையில் 3வது அலையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கரோனா பாதிப்பை எதிர்கொள்ள மருத்துவத்துறையினர் மட்டுமல்ல, மக்களும் தயாராக இருக்க வேண்டும். அடுத்த ஒரு மாதத்துக்குள் 3வது அலை வர வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினிகளை கொண்டு கைகளை கழுவுதல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். கோவையில் தற்போது கொரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவிகிதமாக இருக்கும் நிலையில், இதை அதிகரிக்க தடுப்பூசி மட்டுமே வழியாகும் என்று தெரிவித்துள்ளார்.

கோவையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக இருப்பதால், நிறைய உயிர்சேதம் இல்லாமல் 3வது அலையை எதிர்கொள்ள முடியும். அடுத்த 2 மாதங்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இம்முறை குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தால், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.

அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு 124 ஆக்சிஜன் படுக்கைகள், 82 ஐசியூ படுக்கைகளும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 40 ஆக்சிஜன் படுக்கைகளும், 30 ஐசியூ படுக்கைகளும் தயாராக உள்ளன. தேவையான மருத்துவர்களும் கோவையில் உள்ளனர். கோவைக்கு கொரோனா தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா 3வது அலை ஒரே மாதத்தில் வர வாய்ப்புள்ளதால், மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் படுக்கையை அதிகரிக்க, சென்னையில் இருந்து ஆக்சிஜன் டேங்க் கோவைக்கு மாற்றப்படுகின்றது. இம்முறை கொரோனா பாதிப்பு எல்லா மாவட்டங்களிலும் அதிகரிக்க வாய்ப்பு குறைவு. எனவே, மருத்துவர்கள் தேவைப்பட்டால் பக்கத்து மாவட்டங்களில் இருந்து வரவழைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார்.

English summary
As many as 12,667 beds in more than 70 hospitals in Tamil Nadu have been set aside exclusively for corona treatment, as the central government has said that 12% of children are likely to be affected during the third wave of corona.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tn-prepares-to-face-corona-3rd-wave-new-order-from-chennai-coimbatore-corporation-429881.html