omicron: சென்னை நிலவரம் மோசம்; மீண்டும் ஊரடங்கு? – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

இந்தியாவில் கடந்த 2ம் தேதி ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் பிறகு தற்போது நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவின் 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிஜேபி நாட்டுக்கும் அரசியலமைப்பிற்கும் கேடு; திருமா பேச்சு!

அந்த வகையில், தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 42 பேர் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என சென்னை மக்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நைட் வரை இருக்க சொன்ன கலெக்டர்… அரசு ஊழியர்கள் பகீர்!

இதுகுறித்து மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்புக்கு 5 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும்118 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டு இருக்கிறது.

கைலாசாவில் ராஜேந்திர பாலாஜி?; போலீசாருக்கு ஒரே கல்லில் 2 மாங்காய்!

இதையடுத்து அவர்களது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் வந்த பிறகு தான் எத்தனை பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்? என்ற முழு விபரம் தெரிய வரும்.

தமிழகத்தில் இரவு நேர ஊரங்கு அறிவிப்பது தொடர்பாக டிசம்பர் 31ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தெரிய வரும்.

பொதுத்தேர்வுக்கு வந்த சிக்கல்; பள்ளி மாணவர்கள் ஷாக்!

கடந்த சில தினங்களாக சென்னையில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் இடையே முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்துவிட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் கண்காணிக்கப்படும். மேலும், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/minister-ma-subramanian-has-requested-not-to-celebrate-the-new-year-in-public-places/articleshow/88551989.cms