மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் இரண்டு நாள் குதிரை பந்தயம் – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை, -மெட்ராஸ் ரேஸ் கிளப்பில், ‘செட்டிநாடு இந்தியன் டர்ப் இன்விடேஷன் கோப்பை’ என்ற பெயரில், இரண்டு நாட்கள் குதிரை பந்தய போட்டி நடைபெற உள்ளது.மெட்ராஸ் ரேஸ் கிளப்பில், ஆறு ஆண்டுக்கு ஒரு முறை குதிரை பந்தயம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான இருநாள் போட்டி, ‘செட்டிநாடு இந்தியன் டர்ப் இன்விடேஷன் கோப்பை’ என்ற பெயரில் நடைபெற உள்ளது.நாளை மற்றும் நாளை மறுநாள், நண்பகல் 1:30 மணி முதல் மாலை 5:45 மணி வரை போட்டி நடைபெறும். இப்போட்டியில், சென்னை, மும்பை, கோல்கட்டா, மைசூர் உள்ளிட்ட ஆறு நகரங்களில் இருந்து, குதிரை பந்தய வீரர்கள் பங்கேற்கின்றனர்.வெற்றி பெறும் வீரர்களுக்கு, பணப்பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிக்கான அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. மெட்ராஸ் ரேஸ் கிளப் தலைவரும், செட்டிநாடு சிமென்ட் குழும தலைவருமான அய்யப்பன் கூறியதாவது: இந்தியாவில், 60 ஆண்டுகளாக, குதிரை பந்தய போட்டி நடக்கிறது. சென்னை ரேஸ் கிளப்பில், ஆறு ஆண்டுக்கு பின் குதிரை பந்தய போட்டி நடைபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இரண்டு நாளில், 16 போட்டிகள் நடைபெறும். கொரோனா பாதிப்புக்கு இடையிலும், போட்டிக்கு ‘ஸ்பான்சர்’ செய்ய பல நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இப்போட்டிக்கு, 4 கோடி ரூபாய் செலவாகும். இப்போட்டியை, ஒரு லட்சம் பேர் பார்க்க உள்ளனர். குதிரை பந்தயத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Dinamalar iPaper

சிவகங்கை நகராட்சி, பேரூராட்சி தி.மு.க.,சேர்மன் வேட்பாளர்கள்


சிவகங்கை நகராட்சி, பேரூராட்சி தி.மு.க.,சேர்மன் வேட்பாளர்கள்

முந்தய

சாலை விபத்தில் ஏட்டு பலி


சாலை விபத்தில் ஏட்டு பலி (2)

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2974737