பிரியா சொன்ன அந்த வார்த்தை.. குவியும் அப்ளாஸ்.. கூடவே சீக்ரெட்டை சொல்லி.. கலக்கும் சென்னை மேயர் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட் இந்த வாரம் தாக்கல் செய்யப்படும் எனவும், அதில் மழைநீர் வடிகாலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் மேயர் பிரியா அதிரடியாக அறிவித்துள்ளார்..

மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்று 2 வாரம் கடந்துவிட்டது.. ஆனாலும், இதுவரை மாமன்ற முதல் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது.

இப்போது நிதியாண்டு இறுதி என்பதால், வரும் 2022-23 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது… மாநகராட்சி அலுவலர்கள் இந்த பட்ஜெட் தயாரிப்பு பணியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

மேயர் பிரியா

முதல் மாமன்ற கூட்டம் ஒரு வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.. பெரும்பாலான கவுன்சிலர்கள் புதியவர்கள், அதனால், அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்னைகள், தேவைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு விவரங்கள் சேகரித்து வருவதாக தெரிகிறது.. அப்படி சேகரிக்கும் விவரங்களைதான், மக்களின் பிரச்சனைகளை சரியாக புரிந்து கொண்டு செயல்படுத்த முடியும் என்றும் நம்ப்படுகிறது..

மாநகராட்சி கூட்டம்

அதேபோல, பட்ஜெட் கூட்டத்தைப் பொறுத்தவரை, மாநில அரசு பட்ஜெட் கூட்டம் முடிந்த பிறகு, மாநகராட்சிகளுக்கான பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது.. மண்டல மற்றும் நிலைக்குழுக்களுக்கான தேர்தல் 30ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ஏற்கனவே அறிவிப்பும் வெளியாகி விட்டது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பட்ஜெட் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. சென்னையை பொறுத்தவரை ஏகப்பட்ட பிரச்சனைகள் பிணைந்து கிடக்கின்றன..

அடிப்படை பிரச்சனைகள்

அதனால், இந்த பட்ஜெட் எப்படி இருக்க போகிறது, தங்கள் பகுதியின் நீண்ட கால பிரச்சனைகள் தீருமா என்று சென்னைவாசிகள் காத்து கிடக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான், தாக்கல் செய்யப்போகும் முதல் பட்ஜெட் எப்படி இருக்க போகிறது என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். மேயர் பிரியா, எப்போது பதவியை ஏற்றுக் கொண்டாரே, அப்போதே தன்னுடைய மக்கள் நலப்பணிகளை தொடர ஆரம்பித்துவிட்டார்..

கட்சி தலைமை

குறிப்பாக, திரு.வி.க.நகர் தொகுதியில் 170 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணம் மற்றும் ஊக்கத்தொகை, குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல், மகளிர் தின கொண்டாட்டம், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததார்களுடன் ஆலோசனை என நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறார்.. “நம்மை நம்பி பொறுப்பை கட்சி தலைமை தந்துள்ளது, அதை காப்பாற்ற வேண்டும்தானே” என்று இயல்பாக கேள்வி எழுப்பும் மேயர் பிரியா, மக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என்றும் ஓபனாகவே கருத்து சொல்லி உள்ளார்..

அப்ளாஸ் அள்ளிய பிரியா

இவர் இப்படி சொல்லி உள்ளது பல தரப்பிலும் ஆச்சரியத்தையும் பாராட்டையும் குவித்து வருகிறது.. இதற்கு முன்பு வேறு யாரும் ஒரு அறிவிப்பை வெளியிட்டதில்லை… இந்நிலையில், ராயபுரம் மண்டலத்தில் “வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது.. இந்த முகாமை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.. அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு சொன்னபோது, “சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பரிந்துரைகளை ஏற்று கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

குஷியில் மக்கள்

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய, பிரியா, சென்னையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மண்டலங்களிலும் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.. ஒவ்வொரு முகாமிலும் குறைந்தது மூவாயிரம் பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.. மார்ச் 30ம் தேதி மண்டல குழு தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.. ஆனால், அதற்கு முன்பாகவே, மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.. அந்த பட்ஜெட்டில் அதில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.. பட்ஜெட் அம்சத்தில் உள்ளதை முன்கூட்டியே தெரிவித்த மேயரின் இந்த அறிவிப்பு சென்னைவாசிகளுக்கு குஷியையும், நிம்மதியையும் தந்து வருகிறது..

English summary
when is chennai corporation budget and mayor priya rajan says about budget plan

Source: https://tamil.oneindia.com/news/chennai/when-is-chennai-corporation-budget-and-mayor-priya-rajan-says-about-budget-plan-452582.html