20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது: திரைப்பட விழாவில் 15 தமிழ் … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த திரைப்பட விழாவில் 15 தமிழ் படங்கள் உள்பட 102 படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழக அரசின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன், பிவிஆர் சினிமா ஆகியவை இணைந்து சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் இன்று துவங்கும் இந்த விழாவை செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் துவக்கி வைக்கிறார்.

பிவிஆர் காம்ப்ளக்ஸ் தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் வரும் 22-ம் தேதி வரை 8 நாட்களுக்கு சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. விழாவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் உள்பட 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 12 தமிழ்படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும்.

இந்த ஆண்டு பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது, பார்த்திபனின் இரவில் நிழல், விஜய் சேதுபதி, சீனுராமசாமியின் மாமனிதன் உள்ளிட்ட 12 தமிழ்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியன் பனோரமா பிரிவின் 15 இந்திய படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் கடைசி விவசாயி, மாலைநேர மல்லிப்பூ, போத்தனூர் தபால் சிலையம் ஆகிய முன்று தமிழ் படங்களும் திரையிடப்பட உள்ளன.

இந்த முறை தமிழுக்கு 9 விருதுகள் என அறிவிக்கப்பட உள்ளன. எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி மாணவர்கள் தயாரித்த 9 குறும்படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் பொன்னியின் செல்வன், பீஸ்ட், இரவில் நிழல்கள் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கேற்று பேச உள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiM2h0dHA6Ly93d3cuZGluYWthcmFuLmNvbS9OZXdzX0RldGFpbC5hc3A_TmlkPTgyMjU2MtIBAA?oc=5