திணறும் சென்னை.. எல்லையை இழுத்து மூடுங்க.. கடும் கட்டுப்பாடுகள் தேவை.. ஒரே குரலில் வாசகர்கள் ! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தவறு எங்கே நடந்தது? ஏன் நடந்தது என்பதை ஆராய்வதைவிட, தொற்றில் திமிறி கொண்டிருக்கும் சென்னையை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது.. “எல்லையை மூடுங்க, கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்க” என்பதே பொதுமக்களின் பரவலான எண்ணமாக உள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது…. கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எல்லைமீறி போய் கொண்டிருக்கிறது.

சென்னையில் மட்டும் 25,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்… சென்னையை தவிர்த்து, பக்கத்தில் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டிலும், திருவள்ளூரிலும், காஞ்சிபுரத்திலும் வைரஸ் பாதித்தவர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

imageபிற நாடுகளுக்கு கொரோனா மட்டும்தான் பிரச்சினை.. நமக்கு வேறு நிறைய சவால் உள்ளது.. மோடி பேச்சு

டாப் லிஸ்ட்

முதன்முதலில் ஈரோட்டில் தொடங்கிய இந்த தொற்று இன்று சென்னையை முழுவதுமாக பீடித்துவிட்டது.. சென்னைதான் டாப் லிஸ்ட்டில் உள்ளது.. எங்கே தவறு நடந்தது, ஏன் நடந்தது, என்று ஆராய இது நமக்கு நேரமில்லை.. கோயம்பேடு சந்தை மூடாததும், ஊரடங்கிற்குள் போடப்பட்ட முழு ஊரடங்கு உள்ளிட்ட தவறுகளால்தான் இந்த பாதிப்புகள் சடசடவென உயர்ந்திருக்கின்றன என்பது பரவலான கருத்து.

படுக்கை வசதி

ஆனால், சென்னையில் போதுமான டெஸ்ட்கள் செய்யப்படவில்லை என்பதும், பாதிப்புள்ளவர்களுக்கு படுக்கை வசதிகள் குறைவு, வெண்டிலேட்டர்கள் குறைவு என்றும் ஆங்காங்கே குற்றச்சாட்டும் எழ ஆரம்பித்து விட்டன.. இதனை சுகாதாரத்துறை மறுத்து வருகிறது.. நேற்றுகூட வானகரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது டாக்டர் உயிரிழந்துவிட்டார்.

10 பேர் பலி

மிண்ட் பகுதியில் தங்க சாலையில் இவர் ஒரு கிளினிக் நடத்தி வந்துள்ளார்… இவருக்கு தொற்று இருந்தது என்றால், இவர் எத்தனை பேருக்கு ட்ரீட்மென்ட் செய்தார் என தெரியவில்லை. அவர்களை எல்லாம் இனிதான் தேடி பிடித்து கண்டறிய வேண்டி உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் இன்று உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஆனால் சமூக பரவல் இல்லவே இல்லை என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.

அதிக பாதிப்பு

அரசும் எத்தனையோ முயற்சிகளை செய்து வருகிறது.. முடிந்தவரை ஒவ்வொருரையும் காப்பாற்ற போராடினாலும் ஏன் இந்த பாதிப்பு அதிகமாகி கொண்டே போகிறது? எங்கு தவறு உள்ளது? இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிந்து கொள்ள நாம் வாசகர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்தோம்..

ஒரே கேள்வி

“கொரோனா வேகத்தை கட்டுப்படுத்த சென்னையில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டுமா?” என்பதே அந்த கேள்வி.. அதற்கு “கண்டிப்பாக” என்று 56.06 சதவீதம் பேரும், “தேவையில்லை” என்று 4.4 சதவிதம் பேரும் தெரிவித்துள்ளனர். அதேபோல “சென்னை எல்லையை மூடுங்க” என்று 19.01 சதவீதம் பேரும், “மக்கள் ஒத்துழைப்பு அவசியம்” என்று 20.53 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு பொறுப்பு

மக்களின் இந்த அனைத்து கருத்துக்களுமே அதிமுக்கியமானவையே.. “கடுமை” இருந்தாலே எண்ணிக்கை குறையும் என்று நம்பப்படுகிறது.. எல்லையை மூடுங்க என்று 19.01 சதவீதம் பேர் சொல்லி உள்ளதும் ஏற்கக்கூடியதே.. அதேபோல மக்களின் அஜாக்கிரதையும் இந்த பரவலுக்கு ஒரு காரணம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. என்னதான், அரசு கட்டுப்பாடுகள், விதிகளை விதித்து கடுமையாக்கினாலும், மக்கள் நினைத்தால்தான் அது சாத்தியம்.. சென்னை முழுசுமாக மீண்டு வருவதில் பெரும் பொறுப்பு, பாதி மக்களிடம்.. மீதி அரசிடம் உள்ளது!

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/uncontrollable-corona-in-chennai-and-controls-need-to-be-increased-387978.html