குத்துச்சண்டையும், பா.இரஞ்சித்தின் மெட்ராஸ் பரம்பரைகளும்… `சார்பட்டா’ வீடியோ சொல்வது என்ன?! – விகடன்

சென்னைச் செய்திகள்

இரஞ்சித்தின் படங்களில் பெண்களின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும். ‘சார்பட்டா’விலும் மாரியம்மாளாக கதாநாயகி துஷாரா, ‘பாக்கியம்’ கதாபாத்திரத்தில் அனுபமா, லக்‌ஷ்மி கதாபாத்திரத்தில் சஞ்சனா என மூன்று பெண் கதாபாத்திரங்கள் வீடியோவில் காட்டப்படுகின்றன. இவர்கள் மூவருக்குமே திரைக்கதையில் மிக முக்கிய பங்கு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கையில் கிட்டாரோடு கெவின் என்கிற டாடியாக ஜான் விஜய் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவரது ஹேர்ஸ்டைல், கிட்டார், பெயர் என எல்லாமே அவர் ஒரு ஆங்கிலோ இந்திய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

சார்பட்டா

நடிகர் காளிவெங்கட் படத்தில் கோனி சந்திரன் எனும் கான்ட்ராக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘பழைய ஜோக்’ தங்கதுரை டைகர் கார்டன் தங்கமாக நடித்திருக்கிறார்.

கதாபாத்திர அறிமுக வீடியோ, ஆர்யா உள்பட அத்தனை நடிகர்களும் இந்த கேரக்டர்களுக்காக எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

வீடியோவின் கடைசியாக சார்பட்டா பரம்பரையும், இடியப்ப பரம்பரையும் மோதிக்கொள்ளும் குத்துச்சண்டை அரங்கிற்குப் பின்னால் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் காட்டப்படுகிறது.

இந்த கதாபாத்திர வீடியோவின் இசையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அவரது பின்னணி இசை படத்துக்கான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் கூட்டுகிறது.

கிராமங்களில் குறிப்பாக தென் தமிழத்தில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டாக இருந்ததைப்போல, சென்னை போன்ற பெருநகரத்தில் குத்துச்சண்டை என்பது எளிய மக்களின் விளையாட்டாக, அவர்களின் கலாசாரமாக, அவர்களின் அடையாளமாக இருந்திருக்கிறது. அதை மீண்டும் தன் கலையின் வழியே மீட்டெடுக்க முயன்றிருக்கும் பா.இரஞ்சித், ‘சார்பட்டா’வை எப்படிப் படமாக்கியிருக்கிறார் என்பதைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்!

Source: https://cinema.vikatan.com/tamil-cinema/analysis-on-sarpatta-parambarai-introduction-video