சென்னை ஐஐடியில் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியின் மகன்! சிக்கிய கடிதம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் சிக்கி உள்ளது,

மெட்ராஸ் ஐஐடி என்று அழைக்கப்படும் சென்னை ஐஐடி உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஆகும். இந்தியாவின் தலைச்சிறந்த கல்வி நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ள நிறுவனமும் கூட. ஆனால் இங்கு இன்று நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவரான கொச்சியைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. அவரது உடலை கைப்பற்றிய கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்றுவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சென்னை ஐ.ஐ.டி.யில் தலைவிரித்தாடும் ஜாதி- பணியில் இருந்து வெளியேறுவதாக பேராசிரியர் விபின் கடிதம்சென்னை ஐ.ஐ.டி.யில் தலைவிரித்தாடும் ஜாதி- பணியில் இருந்து வெளியேறுவதாக பேராசிரியர் விபின் கடிதம்

தற்கொலை

எரிந்த நிலையில் இருந்த மாணவரின் உடல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் கொச்சியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் (22) கேரளாவில் பி.டெக் படிப்பை முடித்துவிட்டு 2021 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.ஐ.டி-யில் பிராஜெக்ட் அசோசியெட்டாக சேர்ந்திருக்கிறார்.. இவர் வேளச்சேரியில் உள்ள லதா தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

மனஅழுத்தம் காரணம்

உன்னி கிருஷ்ணன் தங்கியிருந்த வேளச்சேரி வீட்டில் போலீஸார் ஆய்வு செய்த போது11 பக்கம் கொண்ட தற்கொலை கடிதம் கிடைத்தது அதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவருடன் தங்கி வரும் கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உன்னி கிருஷ்ணனின் தந்தை ரகு இஸ்ரோ விஞ்ஞானி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜினாமா

முன்னதாக சென்னை ஐ.ஐ.டியில் இன்று காலை சாதிய பாகுபாடு இருப்பதாக கூறி உதவி பேராசிரியர் விபின் பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தினார். ஏற்கனவே இங்கு பணியாற்றிய பேராசிரியர் வசந்தா கந்தசாமி இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார். உதவிப் பேராசிரியரான விபின் இமெயில் அனுப்பிய கடிதத்தில், சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம், ஜாதி ரீதியான பாகுபாட்டை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதால் தம்மால் இங்கு பணிபுரியவே இயலாத நிலை உருவாகிவிட்டது; ஆகையால் தாம் பணியில் இருந்து வெளியேறுகிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் மாணவர் ஒருவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி தற்கொலை

ஏற்கனவே சென்னை ஐ.ஐ.டியில் சில மாணவர்கள் தற்கொலைகள் செய்து கொண்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி பாத்திமா லத்தீப் மரணம் நாட்டையே உலுக்கியது. அதேபோன்று தற்போதும் ஒரு மாணவர் தற்கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Chennai IIT research student Unni Krishnan from Kochi have committed suicide by setting himself on fire. Kotturpuram police have registered a case and are investigating.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-iit-research-student-commits-suicide-by-fire-425766.html