தேசிய அளவிலான காவல் துறை துப்பாக்கிச் சுடும் போட்டி: சென்னை அருகே நாளை தொடக்கம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை அருகே ஒத்திவாக்கத்தில் காவல் துறையினருக்கான தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி திங்கள்கிழமை (ஜன.9) தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காவல் துறையின் 23-ஆவது தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல் துறையின் அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை தொடங்கி ஜன.13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா வண்டலூா் ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயா் பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் 33 மாநிலங்கள், யூனியன் பிரதேச காவல் துறையினா், மத்திய காவல் அமைப்பினா் என சுமாா் 700 போ் பங்கேற்கின்றனா்.

ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டி நடைபெறுகிறது. போட்டியின் நிறைவு விழா எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் ஜன.13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளாா் என்று அவா் தெரிவித்தாா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMixQVodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzA4LyVFMCVBRSVBNCVFMCVBRiU4NyVFMCVBRSU5QSVFMCVBRSVCRiVFMCVBRSVBRi0lRTAlQUUlODUlRTAlQUUlQjMlRTAlQUUlQjUlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUUlQkUlRTAlQUUlQTktJUUwJUFFJTk1JUUwJUFFJUJFJUUwJUFFJUI1JUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSVBNCVFMCVBRiU4MSVFMCVBRSVCMSVFMCVBRiU4OC0lRTAlQUUlQTQlRTAlQUYlODElRTAlQUUlQUElRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUUlQkUlRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQkYlRTAlQUUlOUElRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFGJTgxJUUwJUFFJTlGJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThELSVFMCVBRSVBQSVFMCVBRiU4QiVFMCVBRSU5RiVFMCVBRiU4RCVFMCVBRSU5RiVFMCVBRSVCRi0lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJTg1JUUwJUFFJUIwJUUwJUFGJTgxJUUwJUFFJTk1JUUwJUFGJTg3LSVFMCVBRSVBOCVFMCVBRSVCRSVFMCVBRSVCMyVFMCVBRiU4OC0lRTAlQUUlQTQlRTAlQUYlOEElRTAlQUUlOUYlRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQUUlRTAlQUYlOEQtMzk4MDU2My5odG1s0gHCBWh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzA4LyVFMCVBRSVBNCVFMCVBRiU4NyVFMCVBRSU5QSVFMCVBRSVCRiVFMCVBRSVBRi0lRTAlQUUlODUlRTAlQUUlQjMlRTAlQUUlQjUlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUUlQkUlRTAlQUUlQTktJUUwJUFFJTk1JUUwJUFFJUJFJUUwJUFFJUI1JUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSVBNCVFMCVBRiU4MSVFMCVBRSVCMSVFMCVBRiU4OC0lRTAlQUUlQTQlRTAlQUYlODElRTAlQUUlQUElRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUUlQkUlRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQkYlRTAlQUUlOUElRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFGJTgxJUUwJUFFJTlGJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThELSVFMCVBRSVBQSVFMCVBRiU4QiVFMCVBRSU5RiVFMCVBRiU4RCVFMCVBRSU5RiVFMCVBRSVCRi0lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJTg1JUUwJUFFJUIwJUUwJUFGJTgxJUUwJUFFJTk1JUUwJUFGJTg3LSVFMCVBRSVBOCVFMCVBRSVCRSVFMCVBRSVCMyVFMCVBRiU4OC0lRTAlQUUlQTQlRTAlQUYlOEElRTAlQUUlOUYlRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQUUlRTAlQUYlOEQtMzk4MDU2My5hbXA?oc=5