ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 971 ஆக அதிகரிப்பு… – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மொத்தம் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 971 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மே 14-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 447 தொற்றுகளில், சென்னையில் 363 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 5,637 பேரில், 1071 பேர் குணமடைந்துள்ளனர்.  44 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரில் சென்னையில் பாதிக்கப்பட்டோர்  58.2 சதவிகிதம். அதேபோல், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் சென்னையில் தான் 66.6 சதவிகித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.சென்னையில், நேற்று கண்டறியப்பட்ட தொற்றுகளில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 81 பேரும், கோடம்பாக்கம் 60 பேரும், தேனாம்பேட்டையில் 44 பேரும், திரு.வி.க.நகரில் 37 பேரும், தண்டையார்பேட்டையில் 35 பேரும், அம்பத்தூரில் 22 பேரும், அண்ணாநகரில் 20 பேரும், அடையாறு 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாதவரத்தில்  13 பேரும், வளசரவாக்கத்தில் 11 பேரும், மணலியில் 11 பேரும், பெருங்குடியில் 8 பேரும், திருவொற்றியூரில் 7 பேரும், ஆலந்தூரில் 6 பேரும், சோழிங்கநல்லூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை: ராயபுரம் – 971

கோடம்பாக்கம் – 895

திரு.வி.க.நகர் – 699

தேனாம்பேட்டை – 608

அண்ணா நகர் – 468

வளசரவாக்கம் – 461

தண்டையார்பேட்டை – 437

அடையாறு – 310

அம்பத்தூர் – 276

திருவொற்றியூர் – 127

மாதவரம் – 85

மணலி – 75

பெருங்குடி – 72

ஆலந்தூர் – 67

சோழிங்கநல்லூர் – 65

வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மாதவரம், மணலி ஆகிய 5 மண்டலங்களில் இதுவரை 1,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னைக்கு உட்பட்ட பகுதிகளான கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர்,  அண்னா நகர் ஆகிய 5 மண்டலங்களில் இதுவரை 2,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளான வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் இதுவரை 975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 61.02 சதவீதம் ஆண்கள், 38.94 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see…

[embedded content]

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/chennai-corona-status-vin-tami-290985.html